Tuesday, September 2, 2008 | By: காவிரி நாடன்

என் அம்மாவுக்கு

இன்னும் என் நினைவிருக்கிறதா அம்மா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய்

சந்தைகளில் தொலைத்தாயா -
திருவிழாக்களில் மறந்தாயா -
திருடனேதும் பறித்தானா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய் ?

சாலைகளில் சில மாலைகளில்
தாயின் விரல் கோர்த்து நடக்கும் பிள்ளைகள்...
நானும் விரல்பிடிக்க மறந்தேனோ -
உன்னை தொலைத்தேனோ ?
நீயாவது என் கரம் பிடித்திருக்க கூடாதா ?

உன் மடி மீது
தலை சாய்த்ததில்லை

உன் நெற்றி முத்தம்
ருசித்ததில்லை

உன் உள்ளங்கை சூடு
என் கன்னங்கள் உணர்ந்ததில்லை

என் தலை கோதும் உன் விரல்கள்
பற்றி விளையாடியதில்லை

உன் சேலைகளில்
ஒளிந்து விளையாடியதில்லை

உன் விரல் ருசி
என் உதடுகள் அறிந்ததில்லை

ஒரு முறையேனும் ஊட்டி விடுவாயா ?
அம்மா...
அது விசமென்றாலும் சம்மதம்.

என்றேனும் சாலைகளில் சந்தித்தால்...
அடையாளம் காண்பாயா - இல்லை
கடந்து செல்வாயா ?

காலம் சம்மதிக்குமா அம்மா
நம் சந்திப்பிற்கு...

2 comments:

Elizabeth said...

Really nice!!!

Natchathraa said...

//ஒரு முறையேனும் ஊட்டி விடுவாயா ?
அம்மா...
அது விசமென்றாலும் சம்மதம்.

என்றேனும் சாலைகளில் சந்தித்தால்...
அடையாளம் காண்பாயா - இல்லை
கடந்து செல்வாயா ?//

ஹம்ம்ம் தாயை தொலைத்த சேயின் அழுகுரல்...கொஞ்சம் வலி நிறைந்த வரிகள்...

மென்மேலும் அதிக கவிதைகள் எழுதிட வாழ்த்துகள்...

Post a Comment